178. அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்
இறைவன் அக்னீஸ்வரர்
இறைவி பஞ்சின்மெல்லடியம்மை
தீர்த்தம் அக்னி தீர்த்தம்
தல விருட்சம் வன்னி
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருக்கொள்ளிக்காடு, தமிழ்நாடு
வழிகாட்டி திருவாரூரில் இருந்து திருக்கரவாசல், திருநெல்லிக்கா வழியாக சென்றால் சுமார் 23 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.
தலச்சிறப்பு

Thirukollikadu Gopuramஒரு சமயம் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க அக்னி பகவான் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் 'கொள்ளிக்காடு' என்று அழைக்கப்படுகிறது. கொள்ளி - நெருப்பு. இத்தலத்து மூலவரும் 'அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'அக்னீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், மிகச் சிறிய பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பஞ்சின்மெல்லடியம்மை' என்னும் திருநாமத்துடன், மிகச் சிறிய வடிவில் தரிசனம் தருகின்றாள்.

Thirukollikadu AmmanThirukollikadu Moolavarகோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமண்யர், காசி விஸ்வநாதர், நால்வர், மகாலட்சுமி, பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

Thirukollikadu Saniஒரு சமயம் தான் கெடுதியே செய்வதாக அனைவரும் நினைப்பதாக வருந்தி சனி பகவான் இத்தலத்திற்கு வந்து சிவவழிபாடு செய்ய, அவரும் காட்சி தந்து இங்கு 'பொங்கு சனி'யாக இருந்து அவரவர் நற்செயல்களுக்கு ஏற்ப, நல்ல பலன்களை வழங்குமாறு அருளினார். அவ்வாறு சனி பகவானும் இங்கு பொங்கு சனியாக அருள்பாலிக்கின்றார். மேலும் அருகில் மகாலட்சுமி சன்னதி இருப்பது சிறப்பு.

இத்தலத்தில் நவக்கிரகங்கள் 'ப' வடிவத்தில் அமைந்திருக்கின்றனர்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com